செய்திகள்

கொடூரக் கணவரை கொன்ற பெண்ணுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய பிரான்ஸ் அதிபர்

Published On 2016-12-29 08:30 GMT   |   Update On 2016-12-29 08:30 GMT
கொடூரத்தனமான கணவரை கொன்றதற்காக பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை விடுதலை செய்யும்படி பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜாக்குலின் சாவேஜ் என்ற பெண், பல ஆண்டுகளாக தன்னை அடித்தும், உதைத்தும், கொடூரத்தனமாக சித்ரவதை செய்துவந்த கணவரை கொன்று விட்டார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் அந்தப் பெண்ணுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட தங்களின் தாயாருக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை அளிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு ஜாக்குலின் சாவேஜின் மகள்கள் கருணை மனு அனுப்பி இருந்தனர்.




இதே கோரிக்கையுடன் ஆன்லைன் மூலம் பிரசார இயக்கமும் நடத்தப்பட்டது. இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 4 லட்சம் மக்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

இதனையடுத்து, நாட்டின் அதிபருக்குண்டான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஜாக்குலின் சாவேஜுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அறிவித்தார். இதையடுத்து, நேற்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Similar News