செய்திகள்

ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப்

Published On 2016-12-17 16:11 GMT   |   Update On 2016-12-17 16:11 GMT
கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

கூகுள் நிறுவனத்தின் கீபோர்டு செயலியான ஜிபோர்டு அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கூகுள் தேடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகளையும் கூகுள் வழங்கி இருக்கிறது.

கூகுள் தேடுபொறி மென்பொருள், எமோஜி மற்றும் ஜிஃப் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும் ஜிபோர்டு செயலி சார்ந்த தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. ஜிபோர்டு செயலி ஆறு மாதங்களுக்கு முன்பே ஐஓஎஸ் இயங்குதளத்தில் வெளியிடப்பட்டது.

ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களும் ஆண்ட்ராய்டு ஜிபோர்டு செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய செயலியில் கூகுள் சின்னத்தை கிளிக் செய்து தேடலை துவங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூகுள் தேடல் மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

கீபோர்டு மூலம் மேற்கொள்ளப்படும் கூகுள் தேடலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முகவரிகள் மற்றும் பல்வேறு பயனுள்ள தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் டைப்பிங் செய்ய பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 

Similar News