செய்திகள்

ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு

Published On 2016-12-16 22:43 GMT   |   Update On 2016-12-16 22:43 GMT
ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

சிரியா, ஈராக் தவிர உலகம் முழுவதும் பாரீஸ், ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

முன்னதாக, அபுபக்கர் தங்கி இருக்கும் இடம், கைது செய்யவோ தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தொகை என அமெரிக்கா அறிவித்து இருந்தது.

உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் பாக்தாதி முக்கிய பங்கு வகித்தவர்.

2010-ம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றினார். 

Similar News