செய்திகள்
அழகி போட்டியில் பர்தாவுடன் பங்கேற்ற ஹலிமா ஏடன்.

அமெரிக்க அழகி போட்டியில் ‘பர்தா’வுடன் பங்கேற்ற பெண்

Published On 2016-11-29 04:57 GMT   |   Update On 2016-11-29 04:57 GMT
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்து வரலாற்று சாதனை படைத்தார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தில் அழகிப் போட்டி நடந்தது. அதற்கு மிஸ் ‘மின்னெ சோட்டா யு.எஸ்.’ என பெயரிடப்பட்டிருந்தது. அப்போட்டியில் 44 பெண்கள் கலந்து கொண்டனர்.

அழகிப்போட்டியின் ஒரு பிரிவாக நீச்சல் உடை அணிந்து உடல் அழகை காட்டும் போட்டி உண்டு. அதில் கலந்து கொண்ட அழகிகள் இதுவரை நீச்சல் உடையில்தான் பங்கேற்றுள்ளனர்.

ஆனால் ‘மிஸ் மின்னெசோட்டா யு.எஸ்.’ அழகி போட்டியில் பங்கேற்ற ஹலிமா ஏடன் (வயது19) என்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்து வரலாற்று சாதனை படைத்தார்.

அதில் வெற்றி பெற்ற அவர் அரையிறுதி போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இவரை தவிர பெரும்பாலானவர்கள் ‘பிகினி’ எனப்படும் நீச்சல் உடையில் பங்கேற்றனர்.

பர்தாவுடன் பங்கேற்ற ஹலிமா ஏடன் அமெரிக்கவாழ் சோமாலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

Similar News