செய்திகள்

இலங்கை அரசு மீது இந்தியா மென்மையான போக்கை கடைபிடிக்கிறது: ராஜபக்சே

Published On 2016-11-23 19:24 GMT   |   Update On 2016-11-23 19:24 GMT
அதிபர் மைத்ரிபால சிறிசேனா அரசுக்கு எதிராக இந்திய அரசு மென்மையான போக்கு கடைபிடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு:

அதிபர் மைத்ரிபால சிறிசேனா அரசுக்கு எதிராக இந்திய அரசு மென்மையான போக்கு கடைபிடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் இதற்கு முன் அந்நாட்டில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தியாவை குற்றம் சாட்டி பேசினார். தனது பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது:- “ எனது ஆட்சியின் போது சீனாவின் நீர்முழ்கி போர்க்கப்பல் இலங்கை துறை முகத்தில் நிறுத்தப்பட்டதற்கு  இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய பெருங்கடலுக்குள் நீர்மூழ்கி கப்பல் நுழையும் முன் தூதரகம் மூலமாக இந்தியாவுக்கு சீனா முறைப்படி தெரிவித்ததாக எனக்கு தெரியவந்தது. ஆனாலும் அந்த விஷயத்தில் இந்தியா எதிர்ப்பை காட்டியது.

ஆனால், முரண்பாடாக, தற்போதைய அதிபர் சிறிசேனா, ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்க உள்ள விவகாரத்தில் இந்தியா தற்போது மிகவும் அமைதி காத்து வருகிறது. நீர்முழ்கி கப்பல் விவகாரத்தில் பெரும் பிரச்சினையை  அவர்கள் கிளப்பினார்கள். ஆனால், ஒட்டு மொத்த துறைமுகத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தால் அது அவர்களுக்கு(இந்தியா) பிரச்சினையாக இல்லை. திரிகோண மலையில் உள்ள நிலத்தை இந்தியாவுக்கு தாரைவார்க்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

இந்தியா சுயநலத்துடன் செயல்பட்டதாகவும் கூறிய ராஜபக்சே, சீனாவுடன் நெருங்கி நாம் செயற்பட்டாலும் இந்தியாவிற்கு சிறப்பான கௌரவத்தை வழங்கினோம். ஆனால் இந்தியா சுய அரசியலுக்காக பல சந்தர்ப்பங்களில் செயல்பட்டது. இதனை என்னால் குறைகூற முடியாது” என்றார். 

Similar News