செய்திகள்

இறந்து போன காதலி நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்

Published On 2016-11-15 14:18 IST   |   Update On 2016-11-15 14:19:00 IST
இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பை தாய்லாந்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தாய்லாந்து:

தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன் இவரின் காதலி நோயால் இறந்து விட்டதால் மிகுந்த சோகத்துடன் இருந்த வாரனனுக்கு 10 அடி நீளமுள்ள வெள்ளை நாகப்பாம்பு ஒன்று அவரின் காதலி போல தெரிய, தற்போது அதனைத் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வருகிறார்.

வாரனன் தினமும் அந்த பாம்புடன் அமர்ந்து உணவு உண்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார். இருவரும் சேர்ந்து காரில் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர்.படுக்கையில் ஒன்றாக தூங்குகின்றனர்.

வாரனன் தினமும் அந்த பாம்புடன் அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்வதால் அப்பகுதி மக்களிடையே வாரனன் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

என்னதான் பாம்பு நன்றாகப் பழகினாலும் அதற்கு விஷமிருப்பதால் ஆபத்து என பலரும் வாரனனை எச்சரிக்கை செய்கின்றனர். ஆனால் வாரனன் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.

புத்த மதத்தின்படி இறந்து போன உறவினர்கள் செல்ல பிராணிகள் உருவத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதன்படி இறந்து போன என்னுடைய காதலிதான் இந்த பாம்பு ரூபத்தில் வந்து என்னுடன் இருக்கிறார் என்பது வாரனின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Similar News