செய்திகள்

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: இரண்டு பேர் பலி

Published On 2016-11-14 00:09 GMT   |   Update On 2016-11-14 00:09 GMT
நியூசிலாந்தின் தெற்குப் பகுதியான கிறிஸ்ட்சர்ச் அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை கொண்டது.

ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும்  விடப்பட்டுள்ளது.


கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு சாலைகளில் வெடிப்பு காணப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையால் கடற்கரையில் 5 மீட்டர் அளவிற்கு அலை எழும்பி ஆர்ப்பரிக்கிறது.

இந்த நிலநடுத்தில் இதுவரி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். பயங்கரமான அதிர்வால் பல்வேறு கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டடங்கள் உறுதி தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் 185 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.

Similar News