செய்திகள்

ஹங்கேரியில் சிறியரக விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு

Published On 2016-09-19 08:16 GMT   |   Update On 2016-09-19 08:16 GMT
ஹங்கேரி தலைநகர் புத்தபெஸ்ட்டில் இரண்டு சிறியரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
புத்தபெஸ்ட்:

கிழக்கு புத்தபெஸ்ட்டுக்கு அருகில் உள்ள கொடோல்லோ அருகே பாராசூட்டில் இருந்து வீரர்கள் குதிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் எதிர்பாராத விதமாக இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து விமான போக்குவரத்து செய்தி தொடர்பாளர் எரிகா பஜ்கோ கூறுகையில் ''பாராசூட் போட்டியின்போது விமானத்தில் இருந்து வீரர்கள் குதித்தவுடன் தரையில் இருந்து 600 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த விமானத்தின் மீது மோதியது.இதில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் நான்கு பேர் இறந்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்றார்.

Similar News