செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் 103 வயது தமிழ் அறிஞர் காலமானார்

Published On 2016-05-15 09:29 IST   |   Update On 2016-05-15 09:29:00 IST
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் அறிஞரும், எழுத்தாளருமான கந்தசாமி குப்புசாமி, ஜோகனஸ்பர்க் நகரில் நேற்றுமுன்தினம் காலமானார்.
ஜோகனஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் அறிஞரும், எழுத்தாளருமான கந்தசாமி குப்புசாமி, ஜோகனஸ்பர்க் நகரில் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 103. அவரது இறுதிச்சடங்குகள் டர்பன் நகரில் இன்று நடக்கின்றன.

தென் ஆப்பிரிக்காவில், டர்பன் நகரில் பிறந்த குப்புசாமி, ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். கல்வித்துறையின் முதலாவது ஆய்வாளராக பணியாற்றினார். தென் ஆப்பிரிக்க அரசை வற்புறுத்தி, அங்குள்ள பள்ளிகளில் தமிழை ஒரு மொழியாக அறிமுகப்படுத்த வைத்தார். இந்தியர்களின் கல்வி பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார். தென் ஆப்பிரிக்க தமிழ் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.

Similar News