செய்திகள்

சட்டவிரோதமாக குடியேற உதவி: ஹங்கேரி நாட்டில் இந்தியர் கைது

Published On 2016-04-25 08:26 IST   |   Update On 2016-04-25 08:26:00 IST
சட்டவிரோதமாக சோமாலியர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை ஆஸ்திரியாவுக்கு அழைத்துச் சென்றபோது ஹங்கேரி போலீசிடம் சிக்கிய இந்தியர்
புடாபெஸ்ட் :

மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வறுமை மற்றும் வன்முறைக்கு பாதிக்கப்படுவோர், ஹங்கேரி வழியாக சட்டவிரோதமாக ஆஸ்திரியா நாட்டுக்கு சென்று குடியேறுகிறார்கள். அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வோரை ஹங்கேரி போலீசார் கைது செய்கின்றனர்.

நேற்றுமுன்தினம் 34 வயதுள்ள இந்தியர் ஒருவர், ஒரு வாகனத்தில் சோமாலியர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை ஆஸ்திரியாவுக்கு அழைத்துச் சென்றபோது ஹங்கேரி போலீசிடம் பிடிபட்டார்.

இதேபோல இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 2 பேர், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 11 பேரை அழைத்துச் சென்றபோது ஹங்கேரி போலீசிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Similar News