செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் லைவ் புகைப்படங்கள்

Published On 2019-01-28 04:45 GMT   |   Update On 2019-01-28 04:45 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இவற்றின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #SamSung #GalaxyS10
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இவற்றின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

அதன்படி புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களில் பன்ச்-ஹோல் செல்ஃபி கேமரா மற்றும் செக்யூர் க்ரிப்டோவாலெட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் முன்பக்க கேமராக்கள் வழங்கப்படுகிறது.

இதனால் கேலக்ஸி எஸ்10 மாடலை விட கேலக்ஸி எஸ்10 பிளஸ் சற்றே அகலமான இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. வன்பொருள் அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: All About Samsung

இருசாதனங்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில், பிரைமரி மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ்கள், மூன்று பிரைமரி கேமரா, இரண்டு செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. எனினும், இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை உறுதிசெய்யும் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கும் நிலையில், புதிய கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல்களில் பெயர் குறிப்பிடப்படவில்லை.

சாம்சங்கின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 9820 சிப்செட், டிசை-கிளஸ்டர் சி.பி.யு., இன்டகிரேட்டெட் என்.பி.யு., எல்.டி.இ. அட்வான்ஸ்டு ப்ரோ மோடெம் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுகிறது. #SamSung #GalaxyS10
Tags:    

Similar News