செய்திகள்
இஸ்ரேலில் இப்படி தான் வாட்ஸ்அப் பயன்படுத்தனுமா?
இஸ்ரேல் நாட்டில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வாட்ஸ்அப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ளவர்கள் இப்படி தான் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனராம்.
கலிஃபோர்னியா:
ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கள் பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக சில சேவைகளுக்கு தடை விதித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனா போன்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் சகஜமான ஒன்று என அனைவரும் அறிந்ததே.
எனினும் அரசு அறிவிப்புகளை அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற எண்ணோட்டத்தில் இஸ்ரேல் குடிமக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் தடை செய்யப்பட்ட நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இஸ்ரேல் குடிமக்கள் ஃபேஸ்புக் சர்வெர்களை கொண்டு வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சோதனை செய்யப்படும் புதிய அம்சங்கள் மற்றும் வாட்ஸ்அப் சார்ந்த இதர விவரங்களை வழங்கும் WABetaInfo இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் வாட்ஸ்அப் இந்த தகவல்களை இதுவரை உறுதி செய்யவில்லை. WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் பயனர்கள் குறுந்தகவல்களின் மெட்டா டேட்டாவை மட்டுமே படிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த ட்வீட் ஒன்றிற்கு பயனர் அளித்திருக்கும் பதில் பின்வருமாறு.,
என்க்ரிப்ஷன் பிரச்சனையே கிடையாது. லாஸ்ட் சீன், ஆன்லைன் நேரம் உள்ளிட்ட மெட்டா டேட்டா மட்டும் சர்வெர்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ்அப் செயலி ஃபேஸ்புக் சர்வெர்களை பயன்படுத்துவதில் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
இவ்வகையான இணைப்பு சிறப்பான தரத்தை வழங்குகிறது. மேலும் அனைத்து சாட்களும், அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் பயனர் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும் என WABetaInfo ட்விட்டரில் தெரிவித்துள்ளது.