செய்திகள்

4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5 அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

Published On 2018-01-30 04:10 GMT   |   Update On 2018-01-30 04:10 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பீஜிங்

சீனாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட நிலையில், மூன்றாவது மாடல் முதற்கட்டமாக சீனாவில் மட்டும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.11,000) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் ரேம் தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவன வலைத்தளத்தில் மட்டும் சத்தமில்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது. கருப்பு, இளஞ்சிவப்பு, நீலம், மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 7202x1440 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
- 2 / 3 / 4 ஜிபி ரேம்
- 16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 12 எம்பி பிரைமரி கேமரா, PDAF, F/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யு.எஸ்.பி.
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
Tags:    

Similar News