செய்திகள்

4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310: விரைவில் வெளியாகும் என தகவல்

Published On 2017-12-29 08:38 GMT   |   Update On 2017-12-29 08:38 GMT
எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 3310 பீச்சர்போனின் 4ஜி வசதி கொண்ட புதிய மொபைல் போனினை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 3310 மொபைல் போன் 2ஜி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய வடிவமைப்பு கொண்ட நோக்கியா 3310 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 மொபைல் போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 4ஜி திறன் கொண்ட நோக்கியா 3310 TA-1077 மொபைல் போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் கசிந்துள்ளது. நோக்கியா 3310 4ஜி மாடல் யுன் ஓ.எஸ். கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பதிப்பு ஆகும்.

நோக்கியா 3310 2ஜி மொபைல் போனில் நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளமும் 3ஜி பதிப்பு ஜாவாவின் பீச்சர் ஓ.எஸ். வழங்கப்பட்ட நிலையில் புதிய எல்டிஇ பதிப்பு யுன் ஓ.எஸ். கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. முந்தைய மாடல்களை விட புதிய மொபைல் போன் சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் அதிக இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. அந்த வகையில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 மாடலில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் லைட், ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய மாடலில் பேட்டரி நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் புதிய மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மொபைல் போனுடன் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News