செய்திகள்

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்:: இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

Published On 2017-11-26 10:15 IST   |   Update On 2017-11-26 10:15:00 IST
எல்ஜி நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தென் கொரியாவில் வெளியானதை தொடர்ந்து இந்தியாவிலும் வெளியிடப்பட இருக்கிறது.
புதுடெல்லி:

எல்ஜி நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தென் கொரியாவில் வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. அதன்படி எல்ஜி நிறுவனத்தின் வி30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற IFA2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி வி30 விலை இந்தியாவில் ரூ.45,000 - ரூ.50,000 வரை  நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



எல்ஜி வி30 சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் QHD 1440x2880 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 16 எம்பி,  f/1.6 + 13 எம்பி,  f/1.9 அப்ரேச்சர் பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம், UX 6.0+ UI
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

இந்தியாவில் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை ரூ.47,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

Similar News