செய்திகள்

சோனி எக்ஸ்பீரியா XZ1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

Published On 2017-09-26 12:22 IST   |   Update On 2017-09-26 12:22:00 IST
இந்தியாவில் சோனி நி்றுவனத்தின் XZ1 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

சோனி மொபைல் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சோனி XZ1 என அழைக்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.2 இன்ச் எச்டிஆர் ஸ்கிரீன், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

இத்துடன் 19 எம்பி மோஷன் ஐ கேமரா,  1/2.3 எக்ஸ்மாோர் ஆர்எஸ் மெமரி, சூப்பர் ஸ்லோ மோஷன் வீடியோ, பிரெடிக்டிவ் கேப்ச்சர், ஆண்டி-டிஸ்டார்ஷன் ஷட்டர், டிரிப்பிள் இமேஜ் சென்சிங் தொழிலநுட்பம் மற்றும் பல்வேறு இதர கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2700 எம்ஏஎச் பேட்டரி மூலம் சத்தியூட்டப்படுவதோடு குவிக் சார்ஜ் 3.0 கொண்டுள்ளது.



சோனி எக்ஸ்பீரியா XZ1 சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் 1920x 1080 பிக்சல் HDR TRILUMINOS டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- வாட்டர் ரெசிஸ்ண்ட் (IP65/IP68)
- 19 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2700 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் எக்ஸ்பீரியா XZ1 மூன்லைட் புளூ, வீனஸ் பின்க் மற்றும் வார்ம் சில்வர் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.44,990 விலையில் விற்பனை தெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News