செய்திகள்
பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி
பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட புதிய சியோமி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியினை புதிய டீசரில் அறிவித்துள்ளது. பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட இரண்டாம் தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் பிரென்ச் நாட்டு வடிவமைப்பாளரான பிலிப் ஸ்டார்க் வடிவமைத்திருப்பதை சியோமி ஏற்கனவே உறுதி செய்திருந்தது. இதே வடிவமைப்பாளர் சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனையும் வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஸ்டார்க் வெளியிட்ட கான்செப்ட் வீடியோவில் ஸ்மார்ட்போனில் மெல்லிய வடிவமைப்பு, வலதுபுறத்தில் கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. சாதாரன இயர்போன்களுக்கு மாற்றாக இவை கேன்டிலீவர் பைசோ-எலெக்ட்ரிக் செராமிக் அகௌஸ்டிக் சிஸ்டம் பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
சியோமி Mi மிக்ஸ் 2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 6.4 இன்ச் AMOLED, 2540x1440 பிக்சல் டிஸ்ப்ளே
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* 19 எம்பி பிரைமரி கேமரா
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 4500 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 1080x2040 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4400 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் ஆண்டராய்டு 6.0 இயங்குதளம் வழங்கப்பட்டது.
முதல் தலைமுறை Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனில் 91.3 சதவிகித ஸ்கிரீன்-டூ-பாடி வடிவமைப்பு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 93 சதவிகித ஸ்கிரீன்-டூ-பாடி வடிவமைப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் வழங்கப்பட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.