செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிமுறை: ஆப்பிள் சாதனங்களின் விலை குறைப்பு

Published On 2017-07-01 14:01 GMT   |   Update On 2017-07-01 14:01 GMT
இந்தியாவில் ஜி.எஸ்.டி. எனும் புதிய வரிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் இன்று முதல் ஜி.எஸ்.டி. எனும் புதிய வரிமுறை அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல் ஒலித்து வரும் நிலையில் ஜி.எஸ்.டி. வரிமுறையால் ஆப்பிள் பிரியர்களுக்கு நன்மை நடந்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, அதன்படி ஐபோன் எஸ்இ 32 ஜிபி மாடல் ரூ.1,200 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிகபட்சமாக ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி மாடல் ரூ.6,600 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

ஐபேட் மாடல்களின் விலை ரூ.900 முதல் ரூ.3,900 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மேக் புக் ஏர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை, எனினும் மேக்புக் ப்ரோ விலையில் ரூ.5,100 மற்றும் ரூ.11,800 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் அடுத்த ஆண்டு புதிய மாறுதல்கள் செய்யப்பட இருக்கும் மேக்புக் ப்ரோ மற்றும் ஐமேக் சாதனங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மேக் மாடல்களின் விற்பனை இன்னும் துவங்காத நிலையில், இவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News