தமிழ்நாடு செய்திகள்

தியாகராஜன்

ஆம்பூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - அர்ச்சகர் கைது

Published On 2025-06-09 10:48 IST   |   Update On 2025-06-09 10:48:00 IST
  • ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நாகநாத சாமி கோவில் உள்ளது.
  • திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நாகநாத சாமி கோவில் உள்ளது.

இங்கு, தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். கோவிலில் உழவார பணி மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் அர்ச்சகர் தியாக ராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவலறிந்த அர்ச்சகர் தியாகராஜன் தலைமறைவானார். இந்த நிலையில் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கோவில் அர்ச்சகர் தியாகராஜனை இன்று அதிகாலை கைது செய்தனர். இதனால் ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இனிமேல் அவர் கோவில் அர்ச்சகராக தொடர்வதில் பக்தர்களுக்கு விருப்பமில்லை. அவர் கோவில் அர்ச்சகராக தொடர்ந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்" என இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News