தமிழ்நாடு செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்

Published On 2025-08-26 13:00 IST   |   Update On 2025-08-26 13:00:00 IST
  • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
  • இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரா ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காலை 8 முதல் 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் காலை 8 மணி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News