தமிழ்நாடு செய்திகள்

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலி: வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

Published On 2025-09-16 17:42 IST   |   Update On 2025-09-16 17:42:00 IST
  • வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
  • அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

தங்களின் தொடர் வெற்றிகள் மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் மென்மேலும் பெருமைகளைச் சேர்த்திட வாழ்த்துகிறேன்.

என கூறினார்.

Tags:    

Similar News