தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை

Published On 2025-05-12 09:17 IST   |   Update On 2025-05-12 09:17:00 IST
  • வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
  • இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை - தென்கலை பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

அப்போது மண்டகபடி கண்டருளியபோது வடகலை தென்கலை பிரிவினருக்கும் இடையே மந்திர புஷ்பம் பாடுவதில் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.

கடந்த வருடமும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின்போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News