தமிழ்நாடு செய்திகள்
சென்னை மெட்ரோவுடன் பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்!
- புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது.
- தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவு பெற உள்ளது. பறக்கும் ரெயில் திட்டத்தை சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் பணிகள் நடப்பாண்டுக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ரெயில்வே அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
பறக்கும் ரெயில் தண்டவாளங்கள், பாலங்கள், சமிக்ஞை, மின்மயமாக்கல், நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழக அரசு பராமரிக்கும்.
சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் சென்னை மெட்ரோ நிர்வாகம் வசம் வரும்.