தமிழ்நாடு செய்திகள்

குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

Published On 2025-08-08 13:05 IST   |   Update On 2025-08-08 13:05:00 IST
  • அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது.
  • தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது.

கடந்த வாரம் வரையில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடித்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது.

தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.

இருப்பினும் அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குற்றாலம் பகுதிகளுக்கு வருகை புரிந்து குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News