தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்

Published On 2026-02-17 09:23 IST   |   Update On 2026-02-17 13:12:00 IST
2026-02-17 04:28 GMT

ஏழை எளிய தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம். ரூ.1884 கோடியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது. 

2026-02-17 04:27 GMT

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டு பெண்கள்.

2026-02-17 04:26 GMT

6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

2026-02-17 04:26 GMT

பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை- அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-02-17 04:25 GMT

மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35 என்ற அளவில் உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-02-17 04:24 GMT

கைம்பெண்களின் கண்ணிய வாழ்வை உறுதி செய்திட நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

2026-02-17 04:23 GMT

விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர். 

2026-02-17 04:23 GMT

தமிழக அரசின் முத்திரை திட்டங்களில் முதன்மையானது மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் வங்கிக் கணக்கில் 3 மாத தொகை ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகை ரூ.2000 என ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. 

2026-02-17 04:23 GMT

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 வீடுகள்- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

2026-02-17 04:23 GMT

தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது

Tags:    

Similar News