தமிழ்நாடு செய்திகள்
null

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

Published On 2025-08-12 08:54 IST   |   Update On 2025-08-12 21:57:00 IST
  • இன்றைய முக்கிய செய்திகள்...
  • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

2025-08-12 15:27 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம். இவர் இசையமைத்துள்ள கூலி படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அமீர்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளர். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

2025-08-12 15:24 GMT

டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் சேப்பாக்கம் மைதானத்தின் புனரமைப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

2025-08-12 15:23 GMT

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி பயணம்?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 10 நாள் பயணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

2025-08-12 12:03 GMT

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே விளையாடி வரும் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் பயிற்சி பெற்றார்.

Tags:    

Similar News