தமிழ்நாடு செய்திகள்

டி.என்.பி.எஸ்சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வௌியீடு

Published On 2025-05-05 18:45 IST   |   Update On 2025-05-05 18:45:00 IST
  • குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது.
  • குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது. மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மெயின் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, 12ஆவது முறையாக குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News