குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் - டி.என்.பி.எஸ்.சி.
- குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.
- இத்தேர்வினை எழுதுவதற்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.
இத்தேர்வினை எழுதுவதற்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகள் 4,922 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 312 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறுகிறது.
இந்த தேர்வில் மூலம் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும். சென்ற ஆண்டு முடிவுகள் வெளியிட நான்கரை மாதங்கள் ஆனது. இந்த முறை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.