தமிழ்நாடு செய்திகள்
பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூர் கடல் 80 அடி உள் வாங்கியது
- வழக்கமாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பாக நடந்துவருகிறது.
- பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் வழக்கமாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பாக நடந்துவருகிறது. அந்த வகையில் ஆனி மாத பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே சுமார் 80 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாசி படிந்த பாறைகள் மீது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஆனாலும் கோவில் அருகில் கடல் இயல்பான நிலையில் உள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வருகின்றனர்.