தமிழ்நாடு செய்திகள்

தஞ்சை, கள்ளப்பெரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2025-06-20 15:36 IST   |   Update On 2025-06-20 15:36:00 IST
  • திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூா்:

தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேப்போல் தஞ்சை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், தஞ்சை அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News