காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- தனியார் பள்ளிகள் இயக்குநரகம்
- செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
- விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.