தமிழ்நாடு செய்திகள்

தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2025-10-22 20:30 IST   |   Update On 2025-10-22 20:30:00 IST
  • அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு.
  • வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், கனமழை பாதிப்பு எதிரொலியால் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News