தமிழ்நாடு செய்திகள்
கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
- கனமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கனமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.