தமிழ்நாடு செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 450 சிசிடிவி கேமராக்கள்

Published On 2025-11-24 17:18 IST   |   Update On 2025-11-24 17:18:00 IST
  • சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடிவு.

வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் 18 படிகள் ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றன. திடீரென 18 படிகள் ஏற கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிய தொடங்குவதால், அசாதாரண நிலை ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு, போலீஸ் உடன் இணைந்து 450 சிசிடிவி கேமராக்களை பொருத்தியள்ளது.

சிசிடிவி-க்களை கண்காணிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்படடுள்ளது. சபரிமலையின் ஒவ்வொரு பகுதிகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். திடீரென பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், உடனடியாக அந்த இடத்திற்கு அதிகாரிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சாலக்காயம் முதல் பண்டிதவளம் வரை 90 கேமராக்கள் பொருத்தப்படடுள்ளது.

பக்தர்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் ஓய்வு எடுக்கும் முக்கியமான பகுதிகளில் 345 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மரக்கூட்டம், நடைப்பந்தல், சோபானம், மேம்பாலம், மாளிகைப்புரம், பண்டிதவளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச கண்காணிப்புக்கு இந்த கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தை கட்டுப்படுத்த, சட்டவிரோத செயல்களை தடுக்க, தேவைப்படும்போது மீட்பு செயல்களை துரிதப்படுத்த இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News