தமிழ்நாடு செய்திகள்
வாணியம்பாடி அருகே பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் பரபரப்பு
- தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
- கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பாறை சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பாறை சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இரவு நேரத்தில் பாறை உருண்டு விழுந்துள்ளது. சாலை நடுவில் உள்ள பாறையை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.