தமிழ்நாடு செய்திகள்

மழைநீரில் நெற்பயிர்கள்- அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

Published On 2024-11-28 15:38 IST   |   Update On 2024-11-28 15:38:00 IST
  • மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை அமைச்சர் அன்பில் ஆய்வு செய்தார்.
  • பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அமைச்சர் உறுதியளித்தார்.

நாகை:

நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமேடு பகுதியில் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தர்.


விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அமைச்சர் உறுதியளித்தார்.

இதையடுத்து கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பாகோவில் ஊராட்சி பெரியநரியங்குடி தொடக்கப் பள்ளியில் தங்கியுள்ள பொதுமக்களை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.


பருவமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News