தமிழ்நாடு செய்திகள்
தொடர் மழை எதிரொலி- புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, புழல் ஏரிக்கு நேற்று 278 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 880 கன அடியாக அதிகரித்துள்ளது.
சோழவரம் ஏரிக்கு 122 கன அடி நீர்வரத்து வர தொடங்கியது.