தமிழ்நாடு செய்திகள்

திசையன்விளை கோவிலில் எலி வாகனம் மீது அமர்ந்து விநாயகரை தரிசனம் செய்த எலி

Published On 2025-08-16 14:59 IST   |   Update On 2025-08-16 14:59:00 IST
  • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
  • பக்தர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

திசையன்விளை:

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது.

நேற்று இரவு இங்கு வழக்கம் போல் பூஜை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது ஓடி வந்த எலி ஒன்று ஆனந்த விநாயகர் முன்பு உள்ள எலி வாகனத்தில் அமர்ந்தபடி சுவாமி தரிசனம் செய்தது. நீண்ட நேரமாக அமர்ந்தபடி சுவாமி தரிசனம் செய்த காட்சியை அங்கு வந்த பக்தர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News