தமிழ்நாடு செய்திகள்

எதுக்கு சத்தம் போடுறிங்க...? - மகளிர் மாநாட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது டென்ஷனான ராமதாஸ்

Published On 2025-08-10 20:36 IST   |   Update On 2025-08-10 20:36:00 IST
  • மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்
  • பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.

இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போது தொண்டர்கள் சத்தம் போட்டதால் ராமதாஸ் கோபமடைந்தார். சத்தம் போட கூடாது... எதுக்கு சத்தம் போடுறிங்க...? என்று தொண்டர்களை ராமதாஸ் கண்டித்தார். 

Tags:    

Similar News