தமிழ்நாடு செய்திகள்
சென்னையை 'குளுகுளு'வென மாற்றிய வானிலை- மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.