தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்- தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
- டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைப்பு வாய்ப்புள்ளது
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது
சென்னை:
காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* காவிரி படுகை மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு.
* சென்னை மற்றும் புறநகரில் 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது.
* இன்று முதல் 25-ந்தேதி வரை சென்னையில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்றார்.