சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூக்கும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 29-ந் தேதி மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு 30-ந் தேதியும் ஆரஞ்சு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூக்கும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 30-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தவிர 26,27-ந் தேதிகளில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.