தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கடல் அரிப்பை தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

Published On 2025-01-20 12:20 IST   |   Update On 2025-01-20 12:20:00 IST
  • கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
  • இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில தி.மு.க. அரசுக்கு உள்ளது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் கடற்கரையைப் பொறுத்தவரையில், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், பிற நாட்களில் கடற்கரையை தாண்டி கடல் நீர் வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்குள் கோயிலில் உள்ள கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணறு வரை கடல் அலை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில தி.மு.க. அரசுக்கு உள்ளது.

முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கடல் அரிப்பைத் தடுக்கவும், பக்தர்களுக்கு விரைந்து தரிசனம் கிடைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News