ஞானசேகரன் செல்போன் அழைப்பு விவகாரம்: அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி
- ஞானசேகரன் சம்பவம் நடைபெற்ற போது செல்போனில் பேசியது தொடர்பான விவரம் தன்னிடம் உள்ளது என்றார் அண்ணாமலை.
- இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர், ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் போன் பேசியதாக தகவல் வெளியானது.
சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து அடுத்த நாள் வரை ஞானசேகரன் யார் யாருடன் பேசியுள்ளார் என்பதற்கான போன் ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தொடர்ந்து ஊடகத்தில் கருத்துகனை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் மட்டுமே குற்றவாளி என, நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இதற்கிடையே, ஞானசேனரன் போனில் பேசியதான ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.