தமிழ்நாடு செய்திகள்

48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2024-12-13 12:29 IST   |   Update On 2024-12-13 12:29:00 IST
  • தெற்கு அந்தமான் கடலில் 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

வங்கக்கடலில் மன்னார் வளைகுடா, அதையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று மற்றும் 16, 17, 18-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும்.

தெற்கு அந்தமான் கடலில் 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News