தமிழ்நாடு செய்திகள்

ஜே.பி. நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு- முக்கிய ஆலோசனை என தகவல்

Published On 2025-09-22 20:42 IST   |   Update On 2025-09-22 20:42:00 IST
  • நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
  • சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.

சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்தித்துள்ளார்.

அப்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News