தமிழ்நாடு செய்திகள்

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-10-16 10:20 IST   |   Update On 2025-10-16 10:20:00 IST
  • கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
  • நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்ல கண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இன்று காலை நல்ல கண்ணுக்கு மீண்டும் உடல்நலம்பாதிக் கப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாலை 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாத நிலையில் டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் உணவு சீராக உட்கொள்வதற்கான சிகிச்சையினை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை கம்யூனிஸ்டு முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Tags:    

Similar News