தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்

Published On 2025-09-28 03:27 IST   |   Update On 2025-09-28 03:27:00 IST
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.
  • முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

கரூர்:

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.

Tags:    

Similar News