தமிழ்நாடு செய்திகள்

மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி - மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-04 11:32 IST   |   Update On 2025-08-04 11:32:00 IST
  • வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
  • எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் ஆலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு வின்பாஸ்ட் அதிகாரிகளை வரவேற்கிறேன்.

* வின்பாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன்.

* இந்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பங்கு உண்டு.

* வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

* இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 40%.

* மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

* வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது.

* எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று.

* இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

* சென்னை, காஞ்சி, கோவை, ஓசூரை தொடர்ந்து மோட்டார் வாகன தொழிற்கூடமாக உருவெடுக்கும் தூத்துக்குடி.

* * ஹூண்டாய், நிசான் , டாடா, பிஎம்டபிள்யூ, ஓலா போன்ற நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை தொடங்கின.

* கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திலும் வின்பாஸ்ட் முதலீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News