தமிழ்நாடு செய்திகள்

எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையை உருவாக்க உறுதியேற்போம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-11-30 13:24 IST   |   Update On 2024-11-30 13:24:00 IST
  • ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்சை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
  • தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 விழுக்காட்டில் இருந்து 0.16 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ந் தேதி "உலக எய்ட்ஸ் தினமாக" அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் "Take the Rights Path", அதாவது, "உரிமைப் பாதையில்" என்பதாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்சை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து, எச்.ஐ.வி தடுப்புப் பணியினை திறம்பட செயல்படுத்திய காரணத்தால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 விழுக்காட்டில் இருந்து 0.16 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும், அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கி றேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News